காமராஜர் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை


காமராஜர் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை
x

காரைக்காலில் காமராஜர் பிறந்தநாளையொட்டி அவருடைய சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

காரைக்கால்

காரைக்கால்-நாகை பிரதான சாலையில் அமைந்துள்ள அம்பாள் சத்திரம் அருகில் உள்ள காமராஜர் சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் மாலை அணிவித்து வணங்கினார். இதில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணீஷ், துணை கலெக்டர் பாஸ்கரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கோட்டுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற காமராஜர் பிறந்தநாள் விழாவில், மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட தலைவர் சந்திரமோகன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரஞ்சித் மற்றும் பலர் காமராஜரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

1 More update

Next Story