சட்டசபை அருகே சுகாதார சீர்கேடு


சட்டசபை அருகே சுகாதார சீர்கேடு
x

புதுவை சட்டசபை அருகே சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி

புதுவை சட்டசபை அருகே சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

சுகாதார சீர்கேடு

புதுவை செஞ்சி சாலையில் சட்டசபையின் பின்வாசல் பகுதி உள்ளது. அதையொட்டி சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகம் உள்ளது.

இவ்விரு பகுதிகளும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாகும். இவற்றின் முன்புற வாசல் பகுதிகள் அடிக்கடி சுத்தம் செய்யப்பட்டு பராமரிக்கப்படுகிறது.

ஆனால் இவ்விரு கட்டிடங்களின் பின்பகுதியானது கவனிப்பாரின்றி கிடக்கிறது. இந்த பகுதியில் உள்ள கழிவுநீர் வாய்க்கால் தற்போது மிகமிக மோசமான நிலையில் காணப்படுகிறது.

பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டதன் காரணமாக மனித மலக்கழிவுகள் இங்கு பொங்கி வழிகின்றன. இந்த கழிவுகள் சட்டசபையின் பின்புற வாசலிலேயே சைடு வாய்க்காலில் தேங்கிக்கிடக்கிறது. இதனால் துர்நாற்றமும் வீசுகிறது.

முகஞ்சுழிப்பு

இதை பார்த்து சட்டசபைக்கு வருபவர்கள் முகம் சுழித்து செல்கின்றனர். சட்டசபை, சுகாதாரத்துறைக்கு அருகிலேயே இத்தகைய நிலை என்றால் மற்ற பகுதிகளில் சுகாதாரத்தின் நிலை எப்படியிருக்கும்? என்று வெளிப்படையாக பேசியபடியே மக்கள் அந்த இடத்தை கடந்து செல்கின்றனர்.


Next Story