காவிரி நீர் வராத நிலையில் குறுகிய கால நெல் ரகங்களை நடவு செய்யலாம்


காவிரி நீர் வராத நிலையில் குறுகிய கால நெல் ரகங்களை நடவு செய்யலாம்
x

காவிரி நீர் வராத நிலையில் விவசாயிகள் குறுகிய கால நெல் ரகங்களை நடவு செய்யலாம் என வேளாண் அறிவியல் நிலையம் அறிவித்துள்ளது.

காரைக்கால்

காரைக்காலுக்கு காவிரி நீரானது வராத காரணத்தால், விவசாயிகள் சம்பா நெல் சாகுபடி செய்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. ஆழ்துளை வசதியுள்ள பகுதிகளில் விவசாயிகள் நேரடி சேற்று விதைப்பு செய்துள்ளனர். தண்ணீர் வசதியில்லா பகுதியில் ஒரு சில விவசாயிகள் சமீபத்தில் பெய்த மழையை கொண்டு புழுதி உழவு செய்துள்ளனர். இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு, பாசன நீர் வசதியுள்ள இடங்களில், நடுத்தர கால வயதுடைய நெல் ரகங்கங்களை செப்டம்பர் மாதத்திற்குள் நேரடி விதைப்பை மேற்கொள்ள வேண்டும். ஆழ்துளை வசதியில்லாத பகுதிகளில் சமீபத்தில் பெய்த மழையை பயன்படுத்தி குறுகிய கால நெல் ரகங்களை புழுதி விதைப்பு செய்ய வேண்டும் என மாதூர் வேளாண் அறிவியல் நிலையம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story