சுதந்திர தின விழிப்புணர்வு ஊர்வலம்


சுதந்திர தின விழிப்புணர்வு ஊர்வலம்
x

சுதந்திர தினத்தையொட்டி அரியாங்குப்பம் தொகுதியில் சுதந்திர தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

புதுச்சேரி

சுதந்திர தினத்தையொட்டி, அரியாங்குப்பம் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் பாஸ்கர் எம்.எல்.ஏ. தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் நடந்த சுதந்திர தின நிகழ்ச்சிக்கு ஆணையர் ரமேஷ் தலைமை தாங்கினார். சபாநாயகர் செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசியக்கொடியை ஏற்றினார். மேலும் தியாகிகள் கவுரவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து வீடுகள்தோறும் தேசியக்கொடியேற்றுவது குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில் சபாநாயகர் செல்வம், பாஸ்கர் எம்.எல்.ஏ.,அரியாங்குப்பம் வியாபாரிகள் மற்றும் தொழில் முனைவோர் நல சங்கத்தினர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் மயிலாட்டம், பொய்க்கால் குதிரை, மாடு வேடம் அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது. இதேபோல் தெற்கு பகுதி போக்குவரத்து சட்டம்-ஒழுங்கு போலீசார் சார்பில் வீடுகள் தோறும் தேசியக்கொடி ஏற்றி விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில் போலீஸ் சூப்பிரண்டு வீரவல்லவன் தலைமையில் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் உள்பட போலீசார் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story