புளு ஸ்டார்ஸ் பள்ளியில் சுதந்திர தின விழா

அரும்பார்த்தபுரத்தில் உள்ள புளு ஸ்டார்ஸ் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு விழா மற்றும் சுதந்திர தின விழா நடைபெற்றது.
மூலக்குளம்
புதுவை அரும்பார்த்தபுரத்தில் உள்ள புளு ஸ்டார்ஸ் மேல்நிலைப்பள்ளியில் 38-ம் ஆண்டு விளையாட்டு விழா மற்றும் சுதந்திர தின விழா புளு ஸ்டார்ஸ் ஸ்போர்ட்ஸ் ஏரினா சார்பில் நடத்தப்பட்டது. விழாவில் பள்ளியின் தாளாளர் மெய்வழி ரவிக்குமார் 38 அடி உயர கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். பள்ளி முதல்வர் வரலட்சுமி ரவிக்குமார் பள்ளியின் கொடியை ஏற்றிவைத்தார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக பளு தூக்கும் போட்டியில் ஆசிய விருது பெற்ற யோகேஷ் கலந்துகொண்டு ஒலிம்பிக் கொடியை ஏற்றினார். இதில் பள்ளி துணை முதல்வர் சாலை சிவசெல்வம் விளையாட்டின் முக்கியத்துவம் குறித்து மாணவர்கள் மத்தியில் பேசினார். தொடர்ந்து மாணவர்கள் இடையே விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. விழாவில் பள்ளியின் நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன் மற்றும் புளு ஸ்டார்ஸ் ஸ்போர்ட்ஸ் ஏரினாவின் பயிற்சியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.






