புதிய அரசு விரைவு பஸ் சேவை


புதிய அரசு விரைவு பஸ் சேவை
x

புதுச்சேரியில் இருந்து திசையன்விளைக்கு புதிய அரசு விரைவு பஸ் தினமும் மாலை 6.30 மணிக்கு புறப்படுகிறது.

புதுச்சேரி

புதுச்சேரியில் இருந்து திசையன்விளைக்கு புதிய அரசு விரைவு பஸ் தினமும் மாலை 6.30 மணிக்கு புறப்படுகிறது.

பஸ் வசதி

புதுவையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு போதிய அளவில் பஸ், ரெயில் போக்குவரத்து இல்லாமல் உள்ளது. கடந்த காலங்களில் இயக்கப்பட்ட பஸ்களும் சில நிறுத்தப்பட்டுள்ளன.

இதனால் விடுமுறை மற்றும் விழாக்காலங்களில் மக்கள் தென்மாவட்டங்களுக்கு செல்ல மிகுந்த சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். எனவே கூடுதலாக பஸ், ரெயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து வந்த வண்ணம் உள்ளது.

திசையன்விளை

இந்த நிலையில் புதுச்சேரியில் இருந்து திசையன்விளைக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் (S.E.T.C.) மூலம் அல்ட்ரா டீலக்ஸ் புதிய பஸ் இயங்க தொடங்கியுள்ளது.

தினமும் மாலை 6.30 மணிக்கு புதுச்சேரி புதிய பஸ் நிலையத்திலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7 மணிக்கு திசையன்விளை சென்றடைகிறது. இந்த பஸ் கடலூர், நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி, திருச்சி, மதுரை, தூத்துக்குடி, திருச்செந்தூர் வழித்தடத்தில் திசையன்விளையை அடைகிறது. அதேபோல் மறுமார்க்கத்தில் திசையன்விளையில் இருந்து தினமும் மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு புதுச்சேரியை அதிகாலை 4.45 மணிக்கு வந்தடைகிறது. புதுச்சேரி-திசையன்விளை டிக்கெட் கட்டணம் ரூ.585 ஆகும்.

இதே வழித்தடத்தில் புதுச்சேரியில் இருந்து திருச்செந்தூர் வரை ஏற்கனவே ஒரு விரைவு பஸ் தினமும் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story