செவிலியர்கள் பணியை புறக்கணித்து போராட்டம்


செவிலியர்கள் பணியை புறக்கணித்து போராட்டம்
x

அரசு மற்றும் மகளிர் மருத்துவமனையில் செவிலியர்கள் பணி புறக்கணிப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டதால் சிகிச்சைக்கு வந்த கர்ப்பிணிகள், குழந்தைகள் பாதிக்கப்பட்டனர்.

புதுச்சேரி

அரசு மற்றும் மகளிர் மருத்துவமனையில் செவிலியர்கள் பணி புறக்கணிப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டதால் சிகிச்சைக்கு வந்த கர்ப்பிணிகள், குழந்தைகள் பாதிக்கப்பட்டனர்.

காலிப்பணியிடங்கள்

புதுச்சேரியில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய செவிலிய அதிகாரி பதவிகளை உருவாக்க வேண்டும். 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரை படி உயர்த்தப்பட்ட நர்சிங் அலவன்ஸ் நிலுவை தொகையை வழங்க வேண்டும்.

கொரோனா காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு வந்த செவிலிய அதிகாரிகளை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி அரசு செவிலிய அதிகாரிகள் சங்கம் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஆர்ப்பாட்டம்

இந்த நிலையில் புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் பணி செய்து வரும் செவிலியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை 8 மணி முதல் 10 மணி வரை பணிகளை புறக்கணித்து மருத்துவமனை நுழைவாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் நேற்று காலை அங்கு பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டது.

வெளிப்புற சிகிச்சைக்காக வந்த கர்ப்பிணிகள், பெண்கள் மற்றும் குழந்தைகள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். அவர்கள் போராட்டம் முடியும் வரை காத்திருந்து சிகிச்சை பெற்றனர்.


Next Story