பணியை புறக்கணித்து நர்சுகள் வெளிநடப்பு


பணியை புறக்கணித்து நர்சுகள் வெளிநடப்பு
x

புதுவை அரசு ஆஸ்பத்திரியில் 2 மணி நேரம் நர்சுகள் பணியை புறக்கணித்து வெளிநடப்பில் ஈடுபட்டதால் நோயாளிகள் கடும் அவதியடைந்தனர்.

புதுச்சேரி

புதுவை அரசு ஆஸ்பத்திரியில் 2 மணி நேரம் நர்சுகள் பணியை புறக்கணித்து வெளிநடப்பில் ஈடுபட்டதால் நோயாளிகள் கடும் அவதியடைந்தனர்.

பணி புறக்கணிப்பு

அரசு ஆஸ்பத்திரியில் காலியாக உள்ள செவிலிய அதிகாரி பணியிடங்களை நிரப்பவேண்டும், பதவி மறுசீரமைப்பு செய்யவேண்டும், புதிய செவிலிய அதிகாரிகள் பணியிடங்களை உருவாக்கவேண்டும், 7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி உயர்த்தப்பட்ட நர்சிங் அலவன்சு நிலுவைத்தொகையை வழங்கவேண்டும், அன்னை தெரசா பட்டமேற்படிப்பு மையத்தில் பயிற்சி முடித்தவர்களுக்கு அரசு பணிகளில் முன்னுரிமை அளிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை செவிலிய அதிகாரிகள் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.

அவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் இன்று புதுவை அரசு ஆஸ்பத்திரியில் காலை 8 மணிமுதல் 10 மணிவரை பணிகளை புறக்கணித்து வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நோயாளிகள் பாதிப்பு

போராட்டத்துக்கு சங்க தலைவர் சுனிலாகுமாரி தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி செயலாளர் ஹரிதாஸ், அமைப்பு செயலாளர்கள் செல்வி, கிறிஸ்டினா, சங்கீதா ஆகியோர் பேசினார்கள். அரசு ஊழியர் சம்மேளன ஆலோசகர் கீதா, கவுரவ தலைவர் பிரேமதாசன், தலைவர் ரவிச்சந்திரன், பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

நர்சுகள் பணியை புறக்கணித்து கோரிக்கைகளுக்காக வெளிநடப்பில் ஈடுபட்டதன் காரணமாக அரசு ஆஸ்பத்திரியில் பணிகள் பாதிக்கப்பட்டன. இதனால் நோயாளிகள் சிரமம் அடைந்தனர்.


Next Story