அதிவேகமாக சென்ற தனியார் பஸ்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை


அதிவேகமாக சென்ற தனியார் பஸ்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை
x
தினத்தந்தி 23 Jun 2023 5:26 PM GMT (Updated: 23 Jun 2023 6:20 PM GMT)

அதிவேகமாக சென்ற தனியார் பஸ்களுக்கு எச்சரிக்கை விடுத்து, பஸ்களும் பறிமுதல் செய்யப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.

திருநள்ளாறு

காரைக்கால் நகர் பகுதியில் மெதுவாக செல்லும் பல தனியார் பஸ்கள், நகர்பகுதியை தாண்டியப்பிறகு, போட்டிப்போட்டுக்கொண்டு அதிவேகமாக இயக்கப்படுவதாகவும், அதிக ஒலிஎழுப்பும் கருவிகளை பயன்படுத்துவதாகவும், காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கனுக்கு புகார்கள் வந்தது.

இதனையடுத்து, காரைக்காலை அடுத்த திருநள்ளாறு சாலையில் இன்று வட்டார போக்குவரத்து துறையைச்சேர்ந்த அதிகாரிகள் அங்காளன், கல்விமாறன் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அதிவேகமாக சென்ற தனியார் பஸ்களை மடக்கி பஸ்சில், வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா?, பயணிகளுக்கு டிக்கெட்டுகள் முறையாக வழங்கப்படுகிறதா? அதிகம் சத்தம் எழுப்பக்கூடிய ஏர்ஹாரன் கருவிகள் உள்ளதா? என ஆய்வு செய்தனர். மேலும் அதிவேகமாக பஸ்சை இயக்கினால், இனிவரும் காலங்களில் கடும் அபராதம் விதிக்கப்படுவதோடு, பஸ் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.


Next Story