தடுப்பு கட்டையில் மோதிய ஆம்னி பஸ்


தடுப்பு கட்டையில் மோதிய ஆம்னி பஸ்
x

பாகூரில் சென்னையை நோக்கி சென்ற ஆம்னி பஸ் தடுப்பு கட்டையில் மோதிய விபத்தில் 7 பயணிகள் காயமடைந்தனர்.

பாகூர்

ராமேசுவரம் அடுத்த ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் இருந்து தனியார் ஆம்னி பஸ் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.

கடலூர் வழியாக புதுச்சேரி எல்லையான முள்ளோடை பகுதியில் வந்தபோது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையின் நடுவில் உள்ள தடுப்புக்கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பஸ்சின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. பஸ்சில் பயணம் செய்த 7 பயணிகள் லேசான காயம் அடைந்தனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மாற்று பஸ்சில் அனுப்பி வைத்தனர். பின்னர் கிரேன் எந்திரம் மூலம் அந்த பஸ் மீட்கப்பட்டது.


Next Story