மருந்தாளுனர் தின விழிப்புணர்வு ஊர்வலம்


மருந்தாளுனர் தின விழிப்புணர்வு ஊர்வலம்
x

புதுவை அரியூர் வெங்கடேஸ்வரா மருந்தியல் கல்லூரி சார்பில் உலக மருந்தாளுனர் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது

புதுச்சேரி

அரியூர் வெங்கடேஸ்வரா மருந்தியல் கல்லூரி சார்பில் உலக மருந்தாளுனர் தின விழிப்புணர்வு ஊர்வலம் புதுவையில் நடைபெற்றது. இந்த ஊர்வலத்துக்கு கல்வி குழுமத்தின் பொதுமேலாளர் சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். மருந்தியல் கல்லூரியின் முதல்வர் ஜெயராமன், கல்லூரி ஆலோசகர் டாக்டர் வெங்கட்ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஊர்வலத்தை போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கம்பன் கலையரங்கம் அருகில் தொடங்கிய ஊர்வலம் அண்ணா சாலை வழியாக சென்று ஆனந்தா-இன் ஓட்டலில் முடிவடைந்தது. இதில் 'மனித ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் மருந்தாளுனரின் பங்கு' என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி மாணவர்கள் சென்றனர். ஊர்வலத்தில் மருந்தியல் கல்லூரி துணை முதல்வர், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், இணை மற்றும் துணை பேராசிரியர்கள், போக்குவரத்து போலீசார் கலந்துகொண்டனர்.


Next Story