நாளை மின்சாரம் நிறுத்தம்


நாளை மின்சாரம் நிறுத்தம்
x

அரியாங்குப்பம், முதலியார்பேட்டை பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

புதுச்சேரி

புதுவை மரப்பாலம் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் அரியாங்குப்பம் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதையொட்டி நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை அரியாங்குப்பம், நோணாங்குப்பம், மணவெளி, ஓடைவெளி, காக்காயந்தோப்பு, வீராம்பட்டினம், சின்னவீராம்பட்டினம், ஆர்.கே.நகர், சோழபுரம், முருங்கப்பாக்கம், அன்னை தெரசா நகர், அரவிந்தர் நகர், ரங்கசாமி நகர், நைனார்மண்டபம், சுதானா நகர் (பகுதி), மூகாம்பிகை நகர், கிழக்கு வாசல் நகர், கணபதி நகர், சேதிலால் நகர், பள்ளத்தெரு மற்றும் மகாலட்சுமி நகர் ஆகிய பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதேபோல் மரப்பாலம் துணை மின் நிலையத்தில் மின்வினியோகம் பெறும் தில்லை நகர், விடுதலை நகர், திரு.வி.க. நகர், புவன்கரே வீதி, பாரதிதாசன் நகர், இந்திரா நகர், முதலியார்பேட்டை பட்டம்மாள் நகர், ரோடியர் மில் சாலை, முத்துபிள்ளை நகர், ராமலிங்கபுரம் வீதி, கடலூர் சாலை (பகுதி), வாசன் தோட்டம், அப்துல்கலாம் நகர், பாரதி மில் வீதி, உடையார்தோட்டம், பழைய மார்க்கெட் வீதி ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.

மேற்கண்ட தகவலை புதுச்சேரி மின்துறை செயற்பொறியாளர் கனியமுதன் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story