மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து போராட்டம்


மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து போராட்டம்
x

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து புதுவையில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்தது.

புதுச்சேரி

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து புதுவையில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்தது.

மணிப்பூர் சம்பவம்

மணிப்பூரில் இருவேறு சமூகத்தினரிடையே நடந்து வரும் மோதலில் 2 பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்தை கண்டித்து புதுவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் இன்று காந்தி வீதி-ஈஸ்வரன் கோவில் வீதி சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு நகர செயலாளர் மதிவாணன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ராஜாங்கம் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாநிலக்குழு உறுப்பினர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் மகளிர் காங்கிரசாரும் மாநில தலைவர் பஞ்சகாந்தி தலைமையில் லாஸ்பேட்டை உழவர்சந்தை அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மவுன போராட்டம்

புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் அண்ணா சாலை காமராஜர் சிலை அருகே மவுன போராட்டம் இன்று மாலை நடந்தது. போராட்டத்திற்கு இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு தலைமை தாங்கினார். வைத்தியநாதன் எம்.எல்.ஏ. முன்னிலை வைத்தார். இதில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அணி தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தியும், வாய், கைகளில் கருப்பு துணி கட்டிக் கொண்டும் மவுன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல் புதுச்சேரி இந்திரா காந்தி சிலை அருகே அனைத்து சமூக அமைப்புகள் மற்றும் தன்னால்வர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.Next Story