பி.ஆர்.டி.சி. பஸ்கள் ஓடத்தொடங்கின

புதுவையில் பி.ஆர்.டி.சி. பஸ்கள் ஓடத்தொடங்கினது.
புதுச்சேரி
பி.ஆர்.டி.சி.யில் பணிபுரியும் டிரைவர், கண்டக்டர்கள் டைமிங் பிரச்சினை காரணமாக தாக்கப்படுவதை கண்டித்தும், தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரியும் கடந்த 23-ந்தேதி இரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னறிவிப்பின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி ஒப்பந்த ஊழியர்கள் 8 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். நிரந்தர பணியாளர்கள் பஸ்களை ஓட்ட முன்வந்தபோதிலும் அதை சிலர் தடுத்து நிறுத்தினர்.
இந்தநிலையில் இன்று காலை முதல் வெளியூர் செல்லும் பஸ்கள் இயக்கப்பட்டன. சென்னை, காரைக்கால், திருப்பதி செல்லும் 12 பஸ்கள் ஓடத்தொடங்கின. அவற்றை நிரந்தர தொழிலாளர்கள் இயக்கி வருகின்றனர். மீதமுள்ள 30 டவுன் பஸ்கள் இன்று 5-வது நாளாக இயக்கப்படாமல் பணிமனையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
Related Tags :
Next Story






