அரசு ஒதுக்கீட்டுக்கான 'சென்டாக்' பட்டியல் வெளியீடு


அரசு ஒதுக்கீட்டுக்கான சென்டாக் பட்டியல் வெளியீடு
x

ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் புதுச்சேரி அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான சென்டாக் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி.

ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் புதுச்சேரி அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான சென்டாக் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து சென்டாக் கூடுதல் ஒருங்கிணைப்பாளர் அமன் சர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஜிப்மர் கல்லூரியில் இடம்

'நீட்' அடிப்படையிலான இளநிலை பட்டப் படிப்புகளுக்கு (எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மற்றும் பி.ஏ.எம்.எஸ்.) அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்கள் சென்டாக் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் புதுச்சேரி ஒதுக்கீட்டு இடங்களுக்கான பட்டியல் www.centacpuducherry.in என்ற சென்டாக் இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.

இதில் ஆட்சேபனைகள் இருந்தால் நாளை(வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு அல்லது அதற்கு முன்பாக டேஷ்போர்டில் (உள்நுழைவு சான்றுகளைப் பயன்படுத்தி) தெரிவிக்கலாம். மேலும் விவரங்களுக்கு இணையதளத்தைப் பார்க்க மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகள் பட்டியல்

ஜிப்மர் ஒதுக்கப்பட்ட அல்லது சேர்க்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் சென்டாக் முதல் சுற்று ஒதுக்கீட்டில் இருந்து நீக்கப்படுவார்கள். ஜிப்மர் அனுமதிக்கப்பட்ட அல்லது ஒதுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் சென்டாக் கவுன்சிலிங்கில் பங்கேற்க விரும்பினால், உள்நுழைவு டாஷ்போர்டில் விருப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளான விண்ணப்பதாரர்களின் வரைவுத் தகுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஏதாவது ஆட்சேபனைகள் இருந்தால் நாளை (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு முன்னதாக டேஷ் போர்டில் (உள்நுழைவுச் சான்றுகளைப் பயன்படுத்தி) தெரிவிக்கலாம். மேலும் விவரங்களுக்கு இணையதளத்தைப் பார்க்க மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story