முதுநிலை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு


முதுநிலை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு
x
தினத்தந்தி 14 Jun 2023 6:03 PM GMT (Updated: 16 Jun 2023 8:57 AM GMT)

புதுவை சுகாதாரத்துறை முதுநிலை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

புதுச்சேரி

இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் உள்ள எம்.டி., எம்.எஸ். ஆகிய மருத்துவ பட்ட மேற்படிப்புகள் நீட் தேர்வில் தகுதி பெறுபவர்களை கொண்டு நிரப்பப்படுகிறது. இந்தநிலையில் 2023-24-ம் ஆண்டு முதுநிலை மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த மாதம் 5-ந் தேதி நடத்தப்பட்டு 14-ந் தேதி முடிவுகள் வெளியிடப்பட்டன.

இந்தநிலையில் புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை சார்பில் முதுநிலை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில் முதுநிலை மருத்துவ படிப்பில் 800-க்கு 647 மதிப்பெண் எடுத்து வி.மீனா முதலிடத்தை பிடித்துள்ளார். ஆர்.சுபாஷினி 643 மதிப்பெண் எடுத்து 2-ம் இடத்தையும், பி.எஸ்.கவுதம் 632 மதிப்பெண் எடுத்து 3-ம் இடத்தையும் பிடித்துள்ளனர். இந்த பட்டியலில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் தரவரிசை பட்டியல் வெளியான 10 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என்று புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Next Story