கல்வித்துறை அலுவலகத்தை ரொட்டிப்பால் ஊழியர்கள் முற்றுகை


கல்வித்துறை அலுவலகத்தை ரொட்டிப்பால் ஊழியர்கள் முற்றுகை
x

புதுவையில் கல்வித்துறை அலுவலகத்தை ரொட்டிப்பால் ஊழியர்கள் முற்றுகையிட்டனர்.

புதுச்சேரி

புதுச்சேரி அரசு கல்வித்துறையின் கீழ் ரொட்டிப்பால் ஊழியர்கள் 700-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு நேற்று பணி இடமாற்றம் வழங்கப்பட்டது. இதற்கு ரொட்டிப்பால் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து இன்று மாலை கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இந்த போராட்டத்திற்கு சங்க ஒருங்கிணைப்பாளர் மாறன் தலைமை தாங்கினார். இதில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கல்வித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் தங்களுக்கு உயர்த்தப்பட்ட சம்பளம் ரூ.18 ஆயிரத்தை வழங்க வேண்டும். அதன் பின்னர் பணியிடமாற்றம் செய்யலாம் என்று கூறினர். உடனே அதிகாரிகள் இது தொடர்பாக அமைச்சர் நமச்சிவாயத்திடம் செல்போனில் பேசினர். அப்போது அவர் நாளை (வியாழக்கிழமை) பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளார் என்று தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிரந்து கலைந்துசென்றனர்.


Next Story