மதுபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம்


மதுபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம்
x

சாலை விபத்து அதிகரித்ததன் எதிரொலியாக மதுபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

காரைக்கால்

சாலை விபத்து அதிகரித்ததன் எதிரொலியாக மதுபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

விபத்துகள் அதிகரிப்பு

புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக இரவு 7 மணி முதல் 11 மணி வரை மதுபோதையில் வாகனம் ஓட்டுவதால், சாலை விபத்துகள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால், மதுபோதையில் வாகனம் ஓட்டாமல் இருக்க, போக்குவரத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கும் சட்டம் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் நிலையில் தற்போது அதனை போக்குவரத்து போலீசார் தீவிரமாக செயல்படுத்த முடிவு செய்துள்ளனர்.

தீவிர கண்காணிப்பு

காரைக்கால் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) நிதின் கவ்ஹால் ரமேஷ் உத்தரவின்பேரில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மரிகிறிஸ்டியன்பால் மற்றும் போலீசார் நகரின் பல்வேறு இடங்களில் நேற்று இரவு சுவாச பரிசோதனை கருவி மூலம் வாகன ஓட்டிகளிடம் பரிசோதனை மேற்கொண்டனர். ஒரு நபருக்கு மட்டும் அபராதம் விதிக்கப்பட்டது.

மதுபோதையில் நடக்கும் விபத்துக்களை தடுக்கும் வகையில் இதுபோன்ற பரிசோதனை இனி அடிக்கடி நடைபெறும் என்றும், மதுபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

1 More update

Next Story