கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பவுடர், கஞ்சா விற்பனை


கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பவுடர், கஞ்சா விற்பனை
x

புதுச்சேரி மாநிலம் மாகி பிராந்தியத்தில் கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பவுடர், கஞ்சா விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மாகி

மாகியில் கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பவுடர், கஞ்சா விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரோந்து பணி

புதுச்சேரி மாநிலம் மாகி பிராந்தியம் போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகர வல்லாட் உத்தரவின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோஜ் மற்றும் போலீசார் இன்று மாகி பள்ளூர் பகுதியில் உள்ள நடன பள்ளி அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒரு கார் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டு இருந்தது.

இதையடுத்து போலீசார் காரில் சோதனை செய்ய சென்றனர். அப்போது காரில் இருந்த 3 வாலிபர்கள் இறங்கி ஓட்டம் பிடித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை விரட்டி பிடிக்க முயன்றனர். இதில் 2 பேர் மாட்டிக்கொண்டார். ஒருவர் தப்பியோடி விட்டார். இதையடுத்து காரை சோதனை செய்தபோது கஞ்சா மற்றும் எம்.டி.எம்.ஏ. என்னும் போதைப்பொருள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

விசாரணையில் அவர்கள் தலச்சேரியை சேர்ந்த அக்ஷவ் பாபு என்ற அக்கு (வயது 26), முகமது நாசிம் (20) என்பதும், கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருட்களை விற்பனை செய்ததும் தெரியவந்தது.

2 பேர் கைது

இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள எம்.டி.எம்.ஏ. போதை பவுடர் மற்றும் கஞ்சா, கார் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் தப்பியோடிய தலச்சேரியை சேர்ந்த முஜிதபா என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story