புதிய பணியிடங்கள் குறித்த விவரங்களை உடனே அனுப்புங்கள்


புதிய பணியிடங்கள் குறித்த விவரங்களை உடனே அனுப்புங்கள்
x

புதுவையில் மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட புதிய பணியிடங்கள் குறித்த விவரங்களை உடனே நிதித்துறைக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஜூலை முதல் வாரத்தில் புதுச்சேரி வர திட்டமிட்டுள்ளார். அவரது வருகையை தொடர்ந்து முன்தயாரிப்பு பணிகளில் அரசுத்துறைகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்தநிலையில் புதுவை அரசுத்துறைகளில் புதியதாக பணியிடங்களை உருவாக்குவது தொடர்பாக ஒப்பதல் கேட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட முன்மொழிவுகள், அதில் இதுவரை அனுமதி வழங்கப்படாத பணியிடங்கள் குறித்த விவரங்களை வெள்ளிக்கிழமைக்குள் நிதித்துறைக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பான குறிப்பாணையை நிதித்துறை சார்பு செயலாளர் அர்ஜூன் ராமகிருஷ்ணன் அனைத்து அரசுத்துறை செயலாளர்கள், இயக்குனர்களுக்கு அனுப்பியுள்ளார்.

மேலும் புதுவை அரசின் பொருளாதாரம் மற்றும் புள்ளி விவரத்துறை இணை செயலாளரான பக்கிரிசாமி இயக்குனர் பொறுப்பினையும் மறு உத்தரவு வரும்வரை கூடுதலாக கவனிப்பார் என்றும் நிதித்துறை துணை செயலாளர் ரத்னகோஷ் கிஷோர் சவுரி உத்தரவிட்டுள்ளார்.


Next Story