சிறப்பு மருத்துவ முகாம்


சிறப்பு மருத்துவ முகாம்
x

காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.

காரைக்கால்

காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில், மாதத்தில் 2 சனிக்கிழமைகளில் புதுச்சேரியில் அமைந்துள்ள ஜிப்மர் ஆஸ்பத்திரி சார்பில், சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை சார்பில் சர்க்கரை, தைராய்டு மற்றும் நாளமில்லா சுரப்பி சம்பந்தமான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இதற்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் இருந்து சிறப்பு டாக்டர்கள் குழுவினர் வருகை புரிந்து பொதுமக்களுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை வழங்கினர். காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த சிறப்பு முகாம் மதியம் 12 மணி வரை நடைபெற்றது. இந்த முகாம் மூலம் ஏராளமான பொதுமக்கள் பயனடைந்தனர்.


Next Story