மாணவர்கள் விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்


மாணவர்கள் விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்
x

புதுவையில் போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடந்தது.

புதுச்சேரி

போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடந்தது.

போதைப்பொருள் எதிர்ப்பு

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26-ந்தேதி போதைப்பொருள் எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு காவல்துறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று காலை விழிப்புணர்வு சைக்கிள் பிரசாரம் நடந்தது. புதுவை கடற்கரை காந்தி சிலை அருகே நடந்த இந்த ஊர்வலத்தை அமைச்சர் லட்சுமிநாராயணன் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் போலீஸ் ஏ.டி.ஜி.பி. ஆனந்த்மோகன், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா சைதன்யா, போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

சைக்கிள் ஊர்வலம்

அதைத்தொடர்ந்து சைக்கிள் ஊர்வலம் கடற்கரை சாலை, சுப்பையா சாலை, சோனாம்பாளையம் சந்திப்பு, அம்பேத்கர் சாலை, உப்பளம் ரோடு, கடலூர் ரோடு, வெங்கடசுப்பாரெட்டியார் சிலை, மறைமலையடிகள் சாலை, நெல்லித்தோப்பு சந்திப்பு, இந்திராகாந்தி சதுக்கம், 100 அடி ரோடு, ராஜீவ்காந்தி சதுக்கம், காமராஜ் சாலை, ராஜா தியேட்டர் சந்திப்பு, அண்ணா சாலை, அஜாந்தா சந்திப்பு, பட்டேல் சாலை, பழைய சாராய ஆலை, கடற்கரை சாலை வழியாக வந்து காந்தி திடலில் முடிவடைந்தது.

இந்த சைக்கிள் ஊர்வலத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள், போலீசார் கலந்துகொண்டனர். அவர்கள் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை வைத்திருந்தனர்.

மோட்டார்சைக்கிள்

தொடர்ச்சியாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.30 மணிக்கு அக்கார்டு ஓட்டலில் இருந்து மோட்டார்சைக்கிள் ஊர்வலம் நடக்கிறது. வழுதாவூர் சாலை, குண்டுசாலை, மூலக்குளம், ரெட்டியார்பாளையம், அரும்பார்த்தபுரம், வில்லியனூர் பைபாஸ், கூடப்பாக்கம், இந்திரகாந்தி சதுக்கம், மரப்பாலம், முருங்கப்பாக்கம், அரியாங்குப்பம் வழியாக சென்று திரும்பி மரப்பாலம், உப்பளம் சாலை, சோனாம்பாளையம், சுப்பையா சாலை வழியாக வந்து கடற்கரை காந்தி திடலில் நிறைவடைகிறது.


Next Story