மாணவர்களிடம் கல்வி கட்டணம் கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது


மாணவர்களிடம் கல்வி கட்டணம் கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது
x

புதுச்சேரியில் ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களிடம் கல்வி கட்டணம் கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது என அதிகாரி அறிவுறுத்தினார்.

புதுச்சேரி

புதுச்சேரியில் ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களிடம் கல்வி கட்டணம் கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது என அதிகாரி அறிவுறுத்தினார்.

ஆலோசனை கூட்டம்

புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் இயக்குனர் இளங்கோவன் தலைமையில் ஆதிதிராவிடர் துறை மற்றும் பழங்குடி மாணவர்களின் பள்ளி, கல்லூரி கல்வி கட்டணத்தை செலுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில் அரசு மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் ராமச்சந்திரா, தனியார் மருத்துவக் கல்லூரி முதல்வர்கள், துணை முதல்வர்கள், புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

நடவடிக்கை

கூட்டத்தில் துறை இயக்குனர் இளங்கோவன் பேசியதாவது:-

புதுச்சேரியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் கல்வியை மேம்படுத்தும் வகையில் அவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்று செலுத்தி வருகிறது. அதன்படி மாணவர்களின் விண்ணப்பங்களை உரிய காலத்திற்குள் ஆதிதிராவிடர் நலத்துறையில் சமர்ப்பிக்க வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகங்களில் தனியாக நோடல் அதிகாரியை நியமிக்க வேண்டும். விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் ஆதிதிராவிடர் நலத்துறை கட்டணத்தை செலுத்தும். எனவே மாணவர்களிடம் கட்டணம் கேட்டு தொல்லை கொடுக்கக் கூடாது. இதுதொடர்பாக பள்ளி, கல்லூரி மீது மாணவர்கள் புகார் அளித்தால் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story