இடிந்து கிடக்கும் அரசலாற்று பாலம்


இடிந்து கிடக்கும் அரசலாற்று பாலம்
x

காரைக்காலில் இடிந்து கிடக்கும் அரசலாற்று பாலத்தை சீரமைக்க கோரி மீனவர்கள் வலியுறுத்துகின்றனர்.

கோட்டுச்சேரி

காரைக்கால் அரசலாற்றில் பொதுப்பணித்துறை விடுதிக்கு எதிரில் ஜெட்டி பாலம் (சிறிய துறைமுகம்) உள்ளது. பிரெஞ்சு ஆட்சியின்போது படகுகளுக்கு செல்ல இப்பாலம் பயன்பட்டது. இந்த பாலத்தில் பொதுமக்கள் நடந்து சென்று ஆற்றின் அழகை ரசித்தனர். அதாவது சூரிய உதயம், சூரிய அஸ்தமனத்தை இந்த பாலத்தில் இருந்து பொதுமக்கள் பார்த்து வந்தனர். 1980 காலக்கட்டத்துக்கு பிறகு இந்தப்பாலம் நடைபயிற்சி செல்வோருக்கும், உள்ளூர் மக்களுக்கும் பொழுது போக்கிடமாக மாறியது.

காரைக்காலில் மீன்பிடித்து துறைமுகம் இல்லாமல் வெளியூர்களில் படகுகளை நிறுத்தி வந்த மீனவர்கள் அரசலாற்றில் படகுகளை நிறுத்தினர். இந்த ஜெட்டியை படகு பழுது பார்க்கும் இடமாக பயன்படுத்தினர்.

அரசலாற்றை ஒட்டிய கருக்களாச்சேரி கழிமுக பகுதியில் 2012-ல் மீன்பிடித் துறைமுகம் அமைந்தபின், ஆற்றிலிருந்து பெரும்பான்மை படகுகள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டன. அங்கு இடநெருக்கடியால், இந்த பாலம்பகுதியில் நிறுத்தி பழுது பார்த்து வருகின்றனர். இந்த பாலத்தின் தூண்கள் சேதமடைந்ததால், பாலத்தின் நடைபாதை ஆற்றுக்குள் சாய்ந்தபடி இருக்கிறது. இந்த பாலம் முழுமையாக இடிந்தால் மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே சேதமடைந்த இந்த பாலத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மீனவர்கள் எதிர்பார்க்கின்றனர்.


Next Story