மீனவரை தாக்கி கொலை மிரட்டல்


மீனவரை தாக்கி கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 6 Aug 2023 5:03 PM GMT (Updated: 6 Aug 2023 5:43 PM GMT)

காலாப்பட்டு அருகே முன்விரோத தகராறில் மீனவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

காலாப்பட்டு

பெரிய காலாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் வேலு (வயது 34), மீனவர். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சரண்ராஜ், அவரது நண்பர்கள் சரவணன், மகா, காந்தி 4 பேருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் வேலு கடற்கரையில் நடந்து சென்றார். அவரை முன்விரோதம் காரணமாக சரண்ராஜ் உள்பட 4 பேரும் சேர்ந்து திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் படுகாயம் அடைந்த வேலு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று, காலாப்பட்டு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள்மணி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரண்ராஜ் உள்பட 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story