போலீசாரின் குறைகள் சரி செய்யப்படும்


போலீசாரின் குறைகள் சரி செய்யப்படும்
x

புதுவையில் போலீசாரின் குறைகள் சரி செய்யப்படும் என்று போலீஸ் டி.ஜி.பி. ஸ்ரீனிவாசன் உறுதியளித்தார்.

கோரிமேடு

போலீசாரின் குறைகள் சரி செய்யப்படும் என்று போலீஸ் டி.ஜி.பி. ஸ்ரீனிவாசன் உறுதியளித்தார்.

கோரிமேடு போலீஸ் நிலையம்

புதுச்சேரி மாநிலத்தின் புதிய டி.ஜி.பி.யாக ஸ்ரீனிவாசன் கடந்த மாதம் பொறுப்பேற்றுக்கொண்டார். அதன் பின்னர் அவர் போலீஸ் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இன்று மதியம் கோரிமேடு போலீஸ் நிலையத்தில் ஆய்வு செய்தார். அப்போது போலீஸ் நிலையத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்கள், கைதிகள் அறையை பார்வையிட்டார்.

தொடர்ந்து அவர் போலீசார் மத்தியில் பேசியதாவது:-

போலீஸ் நிலையங்களில் ஆவணங்களை முறையாக பராமரிக்க வேண்டும். போலீஸ் நிலைய வளாகத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும், காவலர்களுக்கு ஏதாவது குறைகள் இருந்தால் அதனை என்னிடம் தெரிவிக்கலாம். அவை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

கஞ்சா விற்பனை

புதுவை மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்வதை முற்றிலும் தடுக்க வேண்டும். அதற்கு போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக டி.ஜி.பி.யை போலீஸ் சூப்பிரண்டு பக்தவச்சலம், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் வரவேற்றனர். இதனை தொடர்ந்து போலீஸ் டி.ஜி.பி. ஸ்ரீனிவாசன், சேதராப்பட்டு, மேட்டுப்பாளையம், ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார்.


Next Story