மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் இடமாற்றம்


மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் இடமாற்றம்
x

டியூசனுக்கு சென்ற மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை இடமாற்றம் செய்து பள்ளி மேல்நிலைக்கல்வி துணை இயக்குனர் ராஜேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.

நெடுங்காடு

டியூசனுக்கு சென்ற மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை இடமாற்றம் செய்து பள்ளி மேல்நிலைக்கல்வி துணை இயக்குனர் ராஜேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.

மாணவிக்கு பாலியல் தொல்லை

காரைக்கால் மாவட்டம் நெடுங்காட்டை அடுத்த மேல பொன்பேத்தியைச் சேர்ந்தவர் கணேஷ்குமார் (வயது 43). இவர் நெடுங்காடு ஜவகர்லால் நேரு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். வேலை நேரம் போக அப்பகுதியில் தனது மனைவியுடன் சேர்ந்து டியூஷன் சென்டர் நடத்தி வந்தார்.

அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலர் டியூசனுக்கு சென்று படித்து வந்தனர். அவ்வாறு டியூசனுக்கு சென்ற பிளஸ்-2 படிக்கும் 17 வயதுடைய மாணவிக்கு கணேஷ்குமார் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

ஆசிரியர் இடமாற்றம்

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் இதுதொடர்பாக மேல்நிலைக்கல்வி துணை இயக்குனர் ராஜேஸ்வரியிடம் முறையிட்டனர். இதையடுத்து துணை முதல்வர் தலைமையில் 2 ஆசிரியர்கள் மாணவியிடம் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையில் ஆசிரியர் கணேஷ்குமார் திடீரென விடுமுறையில் சென்றுவிட்டார். இதைத்தொடர்ந்து அவர், கோவில்பத்து தந்தை பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு இடமாற்றம் செய்து துணை இயக்குனர் ராஜேஸ்வரி அதிரடியாக உத்தரவிட்டார். அவருக்கு பதிலாக புதுச்சேரியை சேர்ந்த பெண் ஆசிரியை ஒருவர், நெடுங்காடு ஜவகர்லால் நேரு அரசு மேல்நிலைப்பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

1 More update

Next Story