வீட்டை மூவர்ண கொடி வண்ணத்தில் தயார் செய்த தொழிலாளி


வீட்டை மூவர்ண கொடி வண்ணத்தில் தயார் செய்த தொழிலாளி
x

பாகூர் பங்களா வீதியில் தொழிலாளி வீட்டை மூவர்ண கொடி வண்ணத்தில் தயார் செய்துள்ளார்.

பாகூர்

பாகூர் பங்களா வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 43). கட்டிட தொழிலாளியான இவர் தேச பக்தியில் ஆர்வம் கொண்டு தனது வீட்டை செங்கோட்டை, இந்தியா வரைப்படத்தை சிமெண்டு கலவையால் வரைய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இதற்காக வேலைக்கு சென்று தான் சேர்த்து வைத்த பணத்தில் பங்களா வீதியில் 450 சதுர அடியில் கட்ட தொடங்கினார். வீட்டின் முன்பகுதியில் திட்டமிட்டபடி செங்கோட்டை, இந்தியா வரைபடத்தை வரைந்து மூவர்ண கொடியில் வர்ணம் திட்டியுள்ளார். வீட்டின் உள்பக்கத்தில் மூவர்ண கொடியை வரைந்து அசத்தியுள்ளார்.

சிறிய வீட்டில் இவ்வளவு நுணுக்கமாக மூவர்ணக் கொடியை வண்ண மயமாக அடித்திருப்பது அப்பகுதி மக்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீட்டை பலரும் வந்து பார்த்து ரசித்து செல்கின்றனர்.Next Story