வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில் தேர் திருவிழா


வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில் தேர் திருவிழா
x

வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில் தேர் திருவிழா கொடியேற்றுத்துடன் தொடங்கியது.

அரியாங்குப்பம்

வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில் தேர் திருவிழா இன்று கொடியேற்றுத்துடன் தொடங்கியது.

செங்கழுநீர் அம்மன் கோவில்

அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினம் மீனவ கிராமத்தில் பிரசித்தி பெற்ற செங்கழுநீர் அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் தேர் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

இந்த ஆண்டு திருவிழா இன்று காலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கொடிமரம் அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்மன், விநாயகர் உள்ளிட்ட சாமிகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து கொடியேற்றப்பட்டு கொடி மரத்தில் பஞ்சமுக மகாதீபாராதனை காட்டப்பட்டது.

18-ந்தேதி தேரோட்டம்

நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. பாஸ்கர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 18-ந்தேதி நடக்கிறது. விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கின்றனர். இதைத்தொடர்ந்து 19-ந்தேதி தெப்ப உற்சவமும், 25-ந்தேதி முத்துப்பல்லக்கு ஊர்வலமும் நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவல் குழுவினர் செய்து வருகின்றனர்.


Next Story