காய்கறி விலை கிடுகிடு உயர்வு


காய்கறி விலை கிடுகிடு உயர்வு
x
தினத்தந்தி 23 Jun 2023 6:09 PM GMT (Updated: 23 Jun 2023 6:16 PM GMT)

புதுச்சேரி குபேர் மார்க்கெட்டிற்கு காய்கறி வரத்து குறைந்ததால் விலை கிடு, கிடுவென உயர்ந்துள்ளது.

புதுச்சேரி

புதுச்சேரிக்கு வரத்து குறைந்ததால் குபேர் மார்க்கெட்டில் காய்கறி விலை கிடு, கிடுவென உயர்ந்துள்ளது.

காய்கறி விலை உயர்வு

புதுச்சேரி நேரு வீதியில் பெரிய மார்க்கெட் (குபேர் அங்காடி) உள்ளது. இங்கு புதுச்சேரி, தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் காய்கறி வரத்து குறைந்துள்ளது. இதனால் காய்கறி விலை கிடு, கிடுவென உயர்ந்துள்ளது.

புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் காய்கறி விலை நிலவரம் கிலோ கணக்கில் (பழைய விலை அடைப்புக்குறிக்குள்) வருமாறு:-

சாம்பார் வெங்காயம்-ரூ.100 (ரூ.80),பெரிய வெங்காயம்-ரூ.25 (ரூ.20), தக்காளி ரூ.35 (ரூ.20) கேரட் ரூ.80 (ரூ.70), பீன்ஸ் ரூ.90 (ரூ.80), இஞ்சி ரூ.200 (ரூ.180) விலை உயர்ந்திருந்தது.

வரத்து குறைவு

இதுதவிர பூண்டு ரகம் வாரியாக -ரூ.100 முதல் ரூ.180, கத்தரிக்காய்-ரூ.70, பாகற்காய்-ரூ.80, மிளகாய்-ரூ.60, உருளைக்கிழங்கு-ரூ.25, கருணை கிழங்கு-ரூ.60, பீட்ரூட்-ரூ.40, கோவக்காய்-ரூ.35, முருங்கை-ரூ.40, மாங்காய்-ரூ.25, வெண்டைக்காய்-ரூ.50, சுரக்காய்-ரூ.40, சவ்சவ்-ரூ.50, செவ்வாழை பழம் கிலோ ரூ.70, பச்சை வாழைப்பழம் ரூ.60 என விற்பனை செய்யப்பட்டது.

இதுகுறித்து பெரிய மார்க்கெட் வியாபாரி ஒருவரிடம் கேட்டபோது, புதுச்சேரிக்கு தேவையான காய்கறிகள் வெளிமாநிலங்களில் இருந்து தான் வருகிறது. தற்போது மழை காரணமாக வரத்து குறைந்ததால் விலை உயர்ந்துள்ளது என்றார்.


Next Story