வில்லியனூர் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்


வில்லியனூர் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்
x

வில்லியனூர் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் வருகிற 3-ந்தேதி நடக்கிறது.

வில்லியனூர்

வில்லியனூர் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் வருகிற 3-ந்தேதி நடக்கிறது.

பெருமாள் வீதியுலா

புதுவை வில்லியனூரில் புகழ்பெற்ற பெருந்தேவித்தாயார் சமேத தென்கலை வரதராஜா பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பிரம்மோற்சவ விழா தொடங்கி நடந்து வருகிறது.

இதையொட்டி பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இன்று மாலை கருட சேவை நடந்தது. நாளை (வெள்ளிக்கிழமை) யானை வாகனத்தில் பெருமாள் வீதியுலா நடக்கிறது. நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாலை திருக்கல்யாணமும், ஞாயிற்றுக்கிழமை மாலை பெருமாள் மற்றும் திருமங்கை ஆழ்வார் குதிரை வாகனத்தில் வீதி புறப்பாடும் நடக்கிறது.

தேரோட்டம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 3-ந்தேதி காலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் நடக்கிறது. 4-ந்தேதி சப்தாவரணம், 5-ந்தேதி புஷ்ப பல்லக்கு வீதி புறப்பாடு, 6-ந்தேதி ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 7-ந்தேதி மாலை 6.30 மணிக்கு நிறைவாக விடையாற்றி உள்புறப்பாடு நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அலுவலர் ராமதாஸ் மற்றும் பக்தர்கள், பொதுமக்கள் செய்துள்ளனர்.


Next Story