தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை


தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
x

நிரவி அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

நிரவி

காரைக்காலை அடுத்த நிரவி பகுதியை சேர்ந்தவர் ஜெயகோபி (வயது 55), தொழிலாளி. இவர் கடந்த ஒரு ஆண்டாக மூச்சு திணறல் மற்றும் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்தார்.

இந்தநிலையில், நேற்று மதியம் மகள் யோகேஸ்வரி, ஜெயகோபி அறைக்கு சென்றார். அப்போது கதவு பூட்டப்பட்டு இருந்தது. நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தபோது, ஜெயகோபி மின்விசிறியில் தூக்கில் தொங்கினார். இதை பாா்த்து யோகேஸ்வரி மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து கதறினர்.

இது குறித்த புகாரின்பேரில் நிரவி போலீசார் அங்கு வந்து ஜெயகோபி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உடல்நலம் பாதித்ததால் ஜெயகோபி தற்கொலை செய்தது தெரியவந்தது.

1 More update

Next Story