மாணவிகளை கிண்டல் செய்த வாலிபர் கைது


மாணவிகளை கிண்டல் செய்த வாலிபர் கைது
x

புதுவை வாணரப்பேட்டை அருகே மாணவிகளை கிண்டல் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

முதலியார்பேட்டை

புதுவை வாணரப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே வாலிபர் ஒருவர் அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவிகளை பாட்டுப்பாடி கேலி கிண்டல் செய்வதாக போலீசுக்கு புகார் வந்தது. அதன்பேரில் முதலியார்பேட்டை போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் பூபாலன் மற்றும் போலீசார் விரைந்து சென்று மாணவிகளை கிண்டல் செய்த அரியாங்குப்பம் சுப்பையா நகரை சேர்ந்த தமிழ்செல்வம் (வயது22) என்பவரை கைது செய்தனர்.


Next Story
  • chat