இளைஞர் காங்கிரசார் டீ, பக்கோடா விற்று போராட்டம்


இளைஞர் காங்கிரசார் டீ, பக்கோடா விற்று போராட்டம்
x

வேலையின்மை தினமாக அனுசரித்து இளைஞர் காங்கிரசார் டீ, பக்கோடா விற்பனை செய்து போராட்டம் நடத்தினர்.

புதுச்சேரி

வேலையின்மை தினமாக அனுசரித்து இளைஞர் காங்கிரசார் டீ, பக்கோடா விற்பனை செய்து போராட்டம் நடத்தினர்.

வேலையின்மை தினம்

புதுச்சேரி இந்திராகாந்தி சிலை அருகில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் நேற்றைய தினத்தை வேலையின்மை தினமாக கடைபிடித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு தலைமை தாங்கினார்.

இதில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, பொதுச்செயலாளர் திருமுருகன், வக்கீல் பிரிவு தலைவர் மருதுபாண்டியன் மற்றும் இளைஞர் காங்கிரஸ் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

டீ, பக்கோடா விற்பனை

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர் காங்கிரசார், பா.ஜ.க. அரசு ஆட்சிக்கு வரும்போது கூறியதை போல ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தரவில்லை. இதனால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் ஆசிரியர்கள் கூட ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுகின்றனர் என்று வலியுறுத்தி மத்திய, மாநில அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் சிலர், பட்டம் வாங்கியது போல உடை அணிந்திருந்தனர். மேலும் அங்கு டீ, பக்கோடா, சமோசா விற் பனை செய்து நூதன முறையில் போராட்டம் நடத்தி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

போக்குவரத்து நெரிசல்

இந்த போராட் டம் காரணமாக இந்திராகாந்தி சிலை அருகில் 30 நிமிடம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அங்கு பாது காப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் போக்குவரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதியடைந்தனர்.


Next Story