சர்ச்சை பேச்சு; மகா விஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு


சர்ச்சை பேச்சு; மகா விஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 8 Sept 2024 9:26 AM IST (Updated: 8 Sept 2024 10:27 AM IST)
t-max-icont-min-icon

மகா விஷ்ணு மீது 5 பிரிவுகளின் கீழ் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை அரசு பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சொற்பொழிவாளர் மகா விஷ்ணு மீது வன்கொடுமை சட்டம் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய அவரை விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேற்று மாலை போலீசார் மகா விஷ்ணுவை ஆஜர்படுத்தினர்.

அவரை வரும் 20-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து சென்னை புழல் சிறையில் மகாவிஷ்ணு அடைக்கப்பட்டுள்ளார். மகா விஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் நீதி இயக்கம் கொடுத்த புகாரின் பேரில் திருவொற்றியூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

1 More update

Next Story