மின்சார ரெயில்கள் ரத்து எதிரொலி.. பேருந்து நிலையங்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்


மின்சார ரெயில்கள் ரத்து எதிரொலி.. பேருந்து நிலையங்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்
x
தினத்தந்தி 27 July 2024 12:42 PM IST (Updated: 27 July 2024 12:58 PM IST)
t-max-icont-min-icon

ரெயில்கள் ரத்து காரணமாக பேருந்து நிலையங்களிலும், பேருந்துகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

சென்னை,

தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக இன்று (சனிக்கிழமை) மற்றும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் மின்சார ரெயில் சேவைகள் காலை மற்றும் இரவு நேரங்களில் முன்னதாக வெளியிட்ட அறிவிப்பின்படி ரத்து செய்யப்படுகிறது. அதாவது, 55 மின்சார ரெயில்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை இயக்கப்படும் பெரும்பாலான ரெயில்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

ரெயில்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளதால் ரெயில் பயணம் மேற்கொள்ள வந்த பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். மேலும், ரெயில்கள் ரத்து காரணமாக பேருந்து நிலையங்களிலும், பேருந்துகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

குறிப்பாக, ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதிக அளவிலான வாகனங்கள் சாலைகளை ஆக்கிரமித்துள்ளன. இதனால் சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பணியில் காவலர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

1 More update

Next Story