கள்ளக்குறிச்சி விவகாரம்: தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய தேசிய மனித உரிமை ஆணையம்


கள்ளக்குறிச்சி விவகாரம்: தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய தேசிய மனித உரிமை ஆணையம்
x
தினத்தந்தி 25 Jun 2024 3:50 PM IST (Updated: 25 Jun 2024 5:31 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

புதுடெல்லி,

கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரத்தில் கடந்த 18ம் தேதி சட்டவிரோத விஷ சாராயம் குடித்து இதுவரை 59 பேர் உயிரிழந்துள்ளனர். சிகிச்சையில் இருக்கும் 12 பேர் முழுமையாக கண்பார்வையை இழந்திருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான வழக்கில் 20க்கும் மேற்பட்டோரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி விஷ சாராயம் சம்பவம் தொடர்பாக தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் விஷ சாராயம் சம்பவம் தொடர்பாக ஒரு வாரத்துக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி.க்கு தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


1 More update

Next Story