இன்று சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கம்


இன்று சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கம்
x
தினத்தந்தி 17 July 2024 8:03 AM IST (Updated: 17 July 2024 8:05 AM IST)
t-max-icont-min-icon

இன்று சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

சென்னை,

மொகரம் பண்டிகையை ஒட்டி இன்று (ஜூலை 17) சனிக்கிழமை அட்டவணைப் படி மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, நெரிசல் மிகு நேரமான காலை 8 மணி முதல் காலை 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் 6 நிமிட இடைவெளியில் ரெயில்கள் இயக்கப்படும்.அதேபோல, அதிகாலை 5 மணி முதல் காலை 8 மணி வரையிலும், காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் 7 நிமிட இடைவெளியில் ரெயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story