உல்லாசத்திற்கு அழைத்த இளம்பெண்... வீட்டிற்கு சென்ற வாலிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி


உல்லாசத்திற்கு அழைத்த இளம்பெண்... வீட்டிற்கு சென்ற வாலிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி
x
தினத்தந்தி 21 Jun 2024 9:57 AM GMT (Updated: 21 Jun 2024 10:12 AM GMT)

செல்போன் செயலி மூலம் வாலிபருக்கு இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

சென்னை,

அரியானா மாநிலத்தை சேர்ந்தவர் விஜய் தாபா (வயது 20). இவர், கடந்த சில மாதங்களாக பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியில் தங்கி, அங்குள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வருகிறார். இவருக்கு, செல்போன் செயலி மூலம் சென்னை வடபழனியில் உள்ள இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து வாலிபரை அப்பெண் உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். அதன்படி வாலிபர் வடபழனி கங்கை அம்மன் காலனியில் உள்ள ஒரு வீட்டுக்கு சென்று இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்தார். இதற்காக பேசிய பணத்தை விட கூடுதலாக தரும்படி இளம்பெண் கேட்டதால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த வீட்டின் மற்றொரு அறையில் பதுங்கி இருந்த திருநங்கை, இளம்பெண் உள்பட 4 பேர் சேர்ந்து பீர் பாட்டிலை உடைத்து குத்தி கொலை செய்து விடுவதாக விஜய் தாபாவை மிரட்டி, அவரிடம் இருந்த ரூ.12 ஆயிரத்தை பறித்து விட்டு மிரட்டி அனுப்பினர்.

அதன்பிறகு விஜய் தாபாவை செல்போனில் தொடர்பு கொண்ட அவர்கள், இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை காட்டி, அதனை சமூகவலைதளங்களில் வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டி பணம் கேட்டு அடிக்கடி மிரட்டி வந்தனர்.

இது குறித்து விஜய்தாபா போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய அப்ரின் பர்கானா(21), அஸ்விதா என்ற முஸ்தபா (26) என்ற திருநங்கை மற்றும் தினேஷ்குமார் (25), பரத்குமார் (24) ஆகிய 4 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story