டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு தொடங்கியது - 20 லட்சம் பேர் எழுதுகின்றனர்


தினத்தந்தி 9 Jun 2024 4:53 AM GMT (Updated: 9 Jun 2024 7:16 AM GMT)

தமிழ்நாட்டில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு இன்று நடைபெறுகிறது.

சென்னை,

தமிழ்நாட்டில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 பதவியில் காலியாக உள்ள 6 ஆயிரத்து 244 பணியிடங்களுக்கான தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் தேர்வு நடைபெற்று வருகிறது. சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த தேர்வை எழுதுகின்றனர்.

காலை 9.30 மணி முதல் தொடங்கிய தேர்வு மதியம் 12.30 மணி வரை 3 மணி நேரம் நடைபெறுகிறது. சென்னையில் 432 இடங்களில் குரூப்-4 தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வை 8 லட்சத்து 17 ஆயிரத்து 702 ஆண்கள், 12 லட்சத்து 18 ஆயிரத்து 922 பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 150 பேர் எழுதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story