நெல்லையில் 1 யூனிட் எம்.சாண்ட் மணல், மினிலாரி பறிமுதல்: 2 பேர் கைது

முன்னீர்பள்ளம், மேலசெவல் அருகே சப்-இன்ஸ்பெக்டர் எட்வின் அருள்ராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம், மேலசெவல் அருகே சப்-இன்ஸ்பெக்டர் எட்வின் அருள்ராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வடக்கு சங்கன்திரடை சேர்ந்த ஆவுடையப்பன் (வயது 32), ராமசந்திரன்(42) ஆகிய 2 பேரும் வந்த மினி லாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர்கள் உரிய அனுமதி சீட்டு இல்லாமல் சட்ட விரோதமாக 1 யூனிட் எம்.சாண்ட் மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து முன்னீர்பள்ளம் சப்-இன்ஸ்பெக்டர் எட்வின் அருள்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு ஆவுடையப்பன், ராமச்சந்திரன் ஆகிய 2 பேரையும் கைது செய்தார். மேலும் அவர்களிடம் இருந்து 1 யூனிட் எம்.சாண்ட் மணலையும், மினி லாரியையும் போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.
Related Tags :
Next Story