திருச்சியில் 10 கிலோ தங்கம் கொள்ளை - 4 தனிப்படைகள் அமைத்து போலீஸ் விசாரணை

வியாபாரியை வழிமறித்து 10 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி,
சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த நகை வியாபாரி, திண்டுக்கல் மாவட்டத்தில் நகைகளை விற்பனை செய்துவிட்டு, 10 கிலோ தங்கத்துடன் திரும்பி வந்து கொண்டிருந்தார். அந்த கார் திருச்சி சமயபுரம் அருகே வந்தபோது, மர்ம நபர்கள் சிலர் காரை வழிமறித்துள்ளனர்.
பின்னர் அவர்கள் காரில் இருந்த வியாபாரி உள்பட 3 பேர் மீது மிளகாய் பொடியை தூவி, அவர்களிடம் இருந்த தங்கத்தை கொள்ளையடித்துச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வியாபாரி அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், இந்த வழக்கு விசாரணைக்காக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story






