ஆந்திராவில் கொத்தடிமைகளாக இருந்த 11 பேர் மீட்பு

தமிழகத்தை சேர்ந்த 11 பேர் ஆந்திராவில் கொத்தடிமைகளாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர்,
தமிழகத்தை சேர்ந்த சிலர் ஆந்திர மாநிலத்தில் கொத்தடிமைகளாக வேலை செய்து வருவதாக தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பாக வேலூர் ஆட்சியருக்கு மனு கொடுக்கப்பட்டது.
இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் இது குறித்து ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து அதிகாரிகள் சித்தூர் மாவட்டத்தில் உள்ள செங்கல் சூளையில் ஆய்வு நடத்தினர்.
இந்த ஆய்வில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சாமியார் மலையை சேர்ந்த பாஸ்கர் மற்றும் பனையூர் பகுதியை சேர்ந்த கார்த்திக் ஆகிய இருவரின் குடும்பத்தை சேர்ந்த 6 குழந்தைகள் உள்பட 11 பேரை போலீசார் மீட்டனர்.
இந்த நிலையில், நாளை சித்தூர் வருவாய் கோட்டாட்சியரின் அனுமதி கடிதம் கிடைத்த பின்னர், குடியாத்தம் வருவாய் துறையினரிடம் மீட்டக்கப்பட்ட 11 பேர் ஒப்படைக்கப்பட உள்ளனர்
தமிழகத்தை சேர்ந்த 11 பேர் ஆந்திராவில் கொத்தடிமைகளாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






