டெல்லியில் சரக்கு ரெயில் தடம்புரண்டு விபத்து


டெல்லியில் சரக்கு ரெயில் தடம்புரண்டு விபத்து
x
தினத்தந்தி 10 Dec 2025 6:48 PM IST (Updated: 10 Dec 2025 6:50 PM IST)
t-max-icont-min-icon

ரெயில் ஓட்டுநர் உடனடியாக ரெயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள சகுர்பஸ்தி ரெயில் நிலையம் வழியாக சரக்கு ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த ரெயிலின் 2 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து ரெயில் ஓட்டுநர் உடனடியாக ரெயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தடம்புரண்ட ரெயிலை மீட்கும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்த விபத்து தொடர்பாக ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story