சென்னை ஆலந்தூர் அருகே மின்சார ரெயில் மோதி 2 பேர் உயிரிழப்பு

சென்னை ஆலந்தூர் அருகே மின்சார ரெயில் மோதியதில், கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.
சென்னை,
சென்னையை அடுத்த பரங்கிமலை- கிண்டி இடையே ஆலந்தூர் பச்சையம்மன் ரெயில்வே கேட் அருகே தண்டவாளத்தில் நடந்து சென்ற 2 பேர் மீது தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரெயில் மோதியது. இதில் 2 பேரும் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது பற்றி தகவல் அறிந்து வந்த மாம்பலம் ரெயில்வே போலீசார் 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் கிண்டி செக்போஸ்ட் பகுதியை சேர்ந்த சந்துரு(20). இவர் தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். மற்றொருவர் கிண்டியை சேர்ந்த நரேஷ்(23) தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார் என தெரியவந்தது. இது குறித்து ரெயில்வே போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story






