கரூரில் ரெயில் மோதி பெண் உள்பட 2 பேர் பலி

இந்த விபத்து குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை சேர்ந்தவர் அன்னக்கிளி (வயது 52). இவர் இன்று அப்பகுதியில் உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது, தண்டவாளத்தில் வேகமாக வந்த ரெயில் அன்னக்கிளி மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட அன்னக்கிளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அன்னக்கிளி விபத்தில் உயிரிழந்ததை அறிந்த அப்பகுதியினர் அங்கு சென்றுள்ளனர். அவார்களுடன் மாற்றுத்திறனாளி ராஜலிங்கம் என்பவரும் சென்றுள்ளார். ராஜலிங்கம் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அந்த தண்டவாளத்தில் ரெயில் வேகமாக வந்து அவர் மீது மோதியது. இந்த சம்பவத்தில் ராஜலிங்கம் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.
ரெயில் விபத்தில் அன்னக்கிளி உயிரிழந்ததை காண சென்ற மாற்றுத்திறனாளி ராஜலிங்கமும் ரெயில் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து அறிந்த ரெயில்வே போலீசார் விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






