சிறுமியை ஆபாச படம் எடுத்து மிரட்டல் - 2 பெண்கள் கைது

சிறுமியை ஆபாச படம் எடுத்து மிரட்டிய 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியை சேர்ந்த பழனி என்பவரது மனைவி பழனியம்மாள் (வயது 47), 18 வயதுடைய பெண் ஆகியோர் 7-ம் வகுப்பு படிக்கும் சிறுமி மற்றும் சிறுவனை தனித்தனியாக ஆபாசமாக படம் எடுத்துள்ளனர்.
இதனை வெளியிடாமல் இருக்க ஒரு பவுன் நகை கேட்டு இரண்டு பெண்களும் சிறுமியிடம் மிரட்டி உள்ளனர். மேலும் ஆபாச படத்தை சிறுமியின் அக்காவிற்கும், உறவினர் பெண்ணுக்கும் வாட்ஸ் அப்பில் அனுப்பி உள்ளனர். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் தண்டராம்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நிர்மலா, சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து பழனியம்மாள், 18 வயதுடைய பெண் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story






