ராமநாதபுரம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 250 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

மொத்தம் 250 கிலோ எடைகொண்ட ரூ. 10 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டை பகுதியில் தடை செயப்பட்ட கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். சக்கரக்கோட்டை பகுதியில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 250 கிலோ எடைகொண்ட ரூ. 10 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதனை தொடர்ந்து கடல் அட்டைகளை கடத்த முயற்சி செய்த கும்பலில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கடல் வழியாக இலங்கைக்கு கடல் அட்டைகளை கடத்துவதற்காக ராமநாதபுரத்தில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் இந்த கடத்தலில் ஈடுபட்ட மேலும் 3 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.






