நெல்லையில் நாட்டு கைத்துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் 3 பேர் கைது

நெல்லை மாநகரம் மேலப்பாளையத்தில் நாட்டு கைத்துப்பாக்கி வைத்திருந்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
திருநெல்வேலி
நெல்லை மாநகரம் மேலப்பாளையத்தில் நாட்டு கைத்துப்பாக்கி வைத்திருந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சம்மந்தப்பட்ட திண்டுக்கல் மாவட்டம், முஹம்மதியபுரத்தினை சேர்ந்த முஹம்மது முஸ்தபா மகன் ஷாகுல்ஹமீது (வயது 26), திண்டுக்கல் மாவட்டம், பேகம்பூரை சேர்ந்த அசநாதபுரத்தினை சேர்ந்த துல்கர்னி மகன் சிக்கந்தர் ஷேக் ஒலி(25), மற்றும் திருநெல்வேலி மாநகரம், மேலப்பாளையத்தை சேர்ந்த சாகுல் ஹமீது பாஷா மகன் முசாமில் முர்ஷித்(21) ஆகிய 3 பேரை திருநெல்வேலி மாநகர காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story






