ஆட்டோவில் தவறவிட்ட 40 சவரன் நகை உரிமையாளரிடம் ஒப்படைப்பு - ஓட்டுநருக்கு குவியும் பாராட்டு


ஆட்டோவில் தவறவிட்ட 40 சவரன் நகை உரிமையாளரிடம் ஒப்படைப்பு - ஓட்டுநருக்கு குவியும் பாராட்டு
x
தினத்தந்தி 16 Feb 2025 5:36 PM IST (Updated: 16 Feb 2025 5:37 PM IST)
t-max-icont-min-icon

ஆட்டோவில் தவறவிட்ட 40 சவரன் நகையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஓட்டுநரின் செயல் பாராட்டை பெற்றுள்ளது.

சென்னை

சென்னை,

ஐதராபாத்தை சேர்ந்த நிதிஷ் என்பவர் சென்னைக்கு வந்தபோது ஆட்டோவில் பயணம் செய்துள்ளார். அப்போது அவர் தனது பையை ஆட்டோவிலேயே மறந்து விட்டுச்சென்றுள்ளார்.

இதை கவனித்த ஆட்டோ ஓட்டுநர் சரவணன், பையில் 40 சவரன் நகை மற்றும் விலை உயர்ந்த டேப்லட் இருந்ததைக் கண்டு, உடனடியாக அதனை அண்ணா நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி, நகையின் உரிமையாளர் நிதிஷை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். பின்னர் நகை மற்றும் டேப்லட் ஆகியவை நிதிஷிடம் ஒப்படைக்கப்பட்டன. ஆட்டோ ஓட்டுநரின் இந்த நேர்மையான செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

1 More update

Next Story